
மொழி., சிந்தனை விசாலம் தந்து, ஒட்டுமொத்த சமுதாயத்தின் உயரத்தை உந்தி மேலுயர்த்துவது.
மனிதத் தேடலின் எல்லைக்கோடுகளை மிக லாகவமாக எட்டிப் பிடிப்பதற்கான தெளிவு, விடாமுயற்சி ஆகியன தாய்மொழிக் கல்வி மூலமாகவே சாத்தியம் ஆகின்றது.
மண்ணின் மைந்தர்களும், சாமானியர்களும் கல்விவிளக்கம் பெற்று, முன்னிற்க வேண்டும் என்ற உள்மனத்து வேட்கையினை, இலக்காக இட்டு, ஒரு மாமனிதரால் எழுப்பப்பெற்றதே, இந்த ஞான வழிபாட்டுத்தலம்.. −ஹாஜி. கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி. 1956–ம் ஆண்டு, நிலம்கீறி எழுந்து, இன்று வைரவிழாக் கோலாகலத்தில் விழுதுகளை ஆழப்பதித்து ஞானச் சரணாலயமாகத் தனித்துயர்ந்து ஒளிருகின்றது.
1956 – பிஞ்சுப்பொழுதின் உதயத்தில், பேராசிரியர் கே.டி. நீலகண்டன் அவர்களைத் தலைவராகக் கொண்டு தன் அடியெடுப்பை, எமது தமிழ்த்துறை துவக்கியது. 1957-ம் ஆண்டு, தமிழ்மொழிக்கான மகுடாபிசேகம், நிறுவனரின் மெய்யுணர்வில் துளிர்த்து, அரங்கேறியது. தமிழ்ப்பேராசிரியர், கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்பது நனவானது.
சீர்மிகு, கல்வியியல் மற்றும் இறையியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் கே. அப்துல் கபூர் அவர்கள், நிறுவனர் அவர்களால் கல்லூரி முதல்வராகப் பணி நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் பேராசிரியர் எஸ். ஏ. சையது அப்துல்லா அவர்கள் தமிழ்த்துறையிலிருந்து கல்லூரி முதல்வராகத் தெரிந்தெடுக்கப்பட்ட நியமனமும் அரங்கேறியது-வரலாறாகும்.
தமிழ்த்துறையின் சீரிய அங்கங்களாய், துவக்கக் காலம் முதற்கொண்டு சேவையாற்றிய உன்னதமானவர்களின் பங்களிப்பே, இன்று முதுகலைத் தமிழுக்கு அறிமுகவுரை தீட்டியுள்ளது. இளங்கலைத் தமிழும் மாணவர்களின் அதிக ஆர்வத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முனைவர் பட்டங்கள், எமது துறையின் பேராசிரியர், ச. சங்கிலி அவர்களது “கண்ணகி கோட்டங்கள்” முதற்கொண்டு வேர்விட்டு, விழுதுகளை ஆழப் பதிக்கலாயின.
பின்னர்., பேரா. ச. சண்முகம், பேரா. மு. அ. சமது, பேரா. கே. பழனிவேலு, பேராசிரியர் பெ. முருகன் பேராசிரியர் மு. அப்துல் காதர் ஆகியோர் முனைவர் பட்டத்துத் தொடர் நாயகர்களாகத் திகழுகின்றனர்.
தென்றலாய், அக்கினியாய், மயிலிறகாய், தாய்மடியாய்த் தன் படைப்புக்களால் தமிழைச் சீராட்டிய, கவியரசர் நா. காமராசனை, எம்முடன் சிலகாலம் உடன் கொண்டிருந்த பெருமை – எம் சொத்து.
உழைப்பாளி வர்க்கத்தின் வழிகாட்டியாகச் சேவை மேற்கொண்ட பேராசிரியர் வி. சண்முக சுந்தரம் அவர்களால், நெஞ்சு நிமிர்த்திய பெருமைக்குரியது எம் தமிழ்த்துறை.
தமிழ் மூச்சுக்காற்று பரவியுள்ள பகுதியெங்கும், தங்களது உரைவீச்சால் கல்லூரிப் பெருமை பரப்பிவரும் பேராசிரியர்களை உரிமை கொண்டாடும் சிறப்புக்குரியது.
தற்பொழுது, முனைவர் மு. அ. சமது, அவர்களின் சீரிய அரவணைப்பில், தமிழ், ஆணித்தர அடிகளால் முன்னெழுந்து நடக்கின்றது.
குணங்குடியார் தமிழ்ப் பேரவையின் மூலம் இன்றைய இளையோர்க்கு, இன்றையும் நாளையையும் ஒளிரச்செய்வதற்கான வழிகாட்டல் நிகழ்ந்து வருகின்றது.
Dr. M. A. SAMAD, M.A., M.Phil., Ph.D., | Head & Associate Professor |
Dr. P. MURUGAN, M.A., M.Phil., B.Ed., Ph.D., | Associate Professor |
Lt. Dr. M. ABDUL KATHER, M.A., M.Phil., Ph.D., NET | Assistant Professor |
Mr. M. BILAL, M.A., M.Phil., NET, | Assistant Professor |
Mr. R. MOHAMED RAFEEK, M.A., M.Phil., NET | Assistant Professor |
Mr. M. SEETHARAMAN, M.A., M.Phil., B.Ed., | Assistant Professor |
Dr. K. PALANIVELU, M.A., M.Phil., Ph.D., | Assistant Professor |
Ms. G. GOWRI SANKARI, M.A., | Assistant Professor |
Mr. K. JIYAVUDEEN, M.A., M.Phil., CRT., CGT | Assistant Professor |
Ms. B. SASIKALA @ SHAFRIN BANU M.A., M.Ed., | Assistant Professor |
Ms. S. JASMINE SHIFANA, M.A., B.Ed., NET | Assistant Professor |
Ms. P. LATHA, M.A., B.Ed., | Assistant Professor |
Ms. N. MAHALAKSHMI, M.A., M.Phil., | Assistant Professor |
Mr. R. KARTHIK, M.A., M.Phil., | Assistant Professor |