தமிழ்த்துறை உங்களை உள்ளன்போடு வரவேற்கிறது.
                          ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’
                                                           –பிங்கலந்தை  மொழி., சிந்தனை விசாலம் தந்து, ஒட்டுமொத்த சமுதாயத்தின் உயரத்தை உந்தி மேலுயர்த்துவது.

மனிதத் தேடலின் எல்லைக்கோடுகளை மிக லாகவமாக எட்டிப் பிடிப்பதற்கான தெளிவு, விடாமுயற்சி ஆகியன தாய்மொழிக் கல்வி மூலமாகவே சாத்தியம் ஆகின்றது.

மண்ணின் மைந்தர்களும், சாமானியர்களும் கல்விவிளக்கம் பெற்று, முன்னிற்க வேண்டும் என்ற உள்மனத்து வேட்கையினை, இலக்காக இட்டு, ஒரு மாமனிதரால் எழுப்பப்பெற்றதே, இந்த ஞான வழிபாட்டுத்தலம்.. −ஹாஜி. கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி. 1956–ம் ஆண்டு, நிலம்கீறி எழுந்து, இன்று வைரவிழாக் கோலாகலத்தில் விழுதுகளை ஆழப்பதித்து ஞானச் சரணாலயமாகத் தனித்துயர்ந்து ஒளிருகின்றது.

1956 – பிஞ்சுப்பொழுதின் உதயத்தில், பேராசிரியர் கே.டி. நீலகண்டன் அவர்களைத் தலைவராகக் கொண்டு தன் அடியெடுப்பை, எமது தமிழ்த்துறை துவக்கியது. 1957-ம் ஆண்டு, தமிழ்மொழிக்கான மகுடாபிசேகம், நிறுவனரின் மெய்யுணர்வில் துளிர்த்து, அரங்கேறியது. தமிழ்ப்பேராசிரியர், கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்பது நனவானது.

சீர்மிகு, கல்வியியல் மற்றும் இறையியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் கே. அப்துல் கபூர் அவர்கள், நிறுவனர் அவர்களால் கல்லூரி முதல்வராகப் பணி நியமனம் செய்யப்பட்டார்.

பின்னர் பேராசிரியர் எஸ். ஏ. சையது அப்துல்லா அவர்கள் தமிழ்த்துறையிலிருந்து கல்லூரி முதல்வராகத் தெரிந்தெடுக்கப்பட்ட நியமனமும் அரங்கேறியது-வரலாறாகும்.

தமிழ்த்துறையின் சீரிய அங்கங்களாய், துவக்கக் காலம் முதற்கொண்டு சேவையாற்றிய உன்னதமானவர்களின் பங்களிப்பே, இன்று முதுகலைத் தமிழுக்கு அறிமுகவுரை தீட்டியுள்ளது.

கல்லூரியின் முனைவர் பட்டங்கள், எமது துறையின் பேராசிரியர், ச. சங்கிலி அவர்களது “கண்ணகி கோட்டங்கள்” முதற்கொண்டு வேர்விட்டு, விழுதுகளை ஆழப் பதிக்கலாயின.

பின்னர்., பேரா. ச. சண்முகம், பேரா. மு. அப்துல் சமது மற்றும் பேரா. கே. பழனிவேலு ஆகியோர் எமது துறை சார்பான முனைவர் பட்டத்துத் தொடர் நாயகர்களாகத் திகழுகின்றனர்.

இன்றும், பேராசிரியர் பெ. முருகன் மற்றும் பேராசிரியர் மு. அப்துல் காதர் ஆகியோர்களும் தமது முனைவர் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளனர்.

தென்றலாய், அக்கினியாய், மயிலிறகாய், தாய்மடியாய்த் தன் படைப்புக்களால் தமிழைச் சீராட்டிய, கவியரசர் நா. காமராசனை, எம்முடன் சிலகாலம் உடன் கொண்டிருந்த பெருமை – எம் சொத்து.

உழைப்பாளி வர்க்கத்தின் வழிகாட்டியாகச் சேவை மேற்கொண்ட பேராசிரியர் வி. சண்முக சுந்தரம் அவர்களால், நெஞ்சு நிமிர்த்திய பெருமைக்குரியது எம் தமிழ்த்துறை.

தமிழ் மூச்சுக்காற்று பரவியுள்ள பகுதியெங்கும், தங்களது உரைவீச்சால் கல்லூரிப் பெருமை பரப்பிவரும், இளைய பேராசிரியர்களை உரிமை கொண்டாடும் சிறப்புக்குரியது.

தற்பொழுது, முனைவர் பெ. முருகன், அவர்களின் சீரிய அரவணைப்பில், தமிழ், ஆணித்தர அடிகளால் முன்னெழுந்து நடக்கின்றது.

குணங்குடியார் தமிழ்ப் பேரவை மற்றும் ஹௌதியா இலக்கியச்சுற்றம் எனும் இரு விழிகளால், இன்றைய இளையோர்க்கு, இன்றையும் நாளையையும் ஒளிரச்செய்வதற்கான வழிகாட்டல் நிகழ்ந்து வருகின்றது.


துறைத்தலைவர்:

 • முனைவர் பெ. முருகன்


பேராசிரியர்கள்:

 • முனைவர் மு. அப்துல் காதர்
 • பேரா. ம. பிலால்
 • பேரா. இரா. முகம்மது ரபீக்
 • பேரா. மா. சீத்தாராமன்
 • முனைவர் கா. பழனிவேலு
 • பேரா. க. கௌரி சங்கரி
 • பேரா. கே. ஜியாவுதீன்
 • பேரா. எஸ். ஜாஸ்மின் ஷிஃபானா
 • பேரா. பி. லதா
 • பேரா. ஆர். கார்த்திக்

 

முன்னாள் துறைத் தலைவர்கள்:

பேரா. கே. டி. நீலகண்டன்1957 – 65
பேரா. வி. சண்முக சுந்தரம்1965 – 85
பேரா. எஸ். ஏ. சையது அப்துல்லா1985 – 88
பேரா. ச. சண்முகம்1988 – 98
பேரா. ஏ. கனகராஜன்1998 – 01
பேரா. பி. கோபால்2001 – 04
பேரா. மு. அ. ஆசாத்2004 – 17
முனைவர் மு. அப்துல் சமது2017 – 20